2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலை இன்னர்வீல் கழகத்தின் 11ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை இன்னர்வீல் கழகத்தின் 11ஆவது தலைவர் பதவியேற்பு  நிகழ்வு  நேற்று சனிக்கிழமை மாலை டைக் வீதியில்  அமைந்துள்ள  ரொட்டறி இல்லத்து கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புதிய தலைவியாக  லதா திருக்குமாரநாதன்  பதவியேற்றார்.

இந்நிகழ்வில் இலங்கை மின்சாரசபையின் கிழக்கு  மாகாண வர்த்தக  முகாமையாளர்  சுஜந்தா பெல்சியன் பிரதம அதிதியாகவும் ரொட்டறிக் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயகுமார் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

குறைந்த வருமானம் உள்ள குடும்ப  பொறுப்பை  சுமக்கும் கணவனை இழந்த 2 குடும்பத் தலைவிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் கிழக்கு  பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கல்விப்  புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டன.

ரொட்டறிக் கழகத்தின் துணைவிமார்களையும் குடும்ப  உறுப்பினர்களையும் கொண்டு இன்னர்வீல் கழகம் திருகோணமலையில் 21.11.2002இல் ஆரம்பிக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .