2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

புதிதாக 16 சுதேச மருத்துவர்கள் நியமனம்

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாணத்தில் புதிதாக 16 சுதேச மருத்துவர்கள் மாகாண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும நிகழ்வு நேற்று புதன்கிழமை மாகாண சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூரினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆயர்வேதம், சித்த, யூனானி ஆகிய வைத்திய துறைகளில் முறையே நான்கு, ஐந்து மற்றும் ஏழு என புதிதாக வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஐந்து மருத்துவர்களும். திருகோணமலை மாவட்டத்திற்கு இரண்டு மருத்துவர்களும் அம்பாறை மாவட்டத்திற்கு 9 மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .