2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சீதனவெளியில் 28 வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 04 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார், எஸ்.சசிகுமார்


சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக சீதனவெளியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட  28 வீடுகள் இரண்டாம் கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. 

இந்த வீடுகள் 9.5 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

பட்டித்திடல், கிளிவெட்டி, கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களே சீதனவெளியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக  இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களில் முதற்கட்டமாக 56 குடும்பங்களுக்கு ஏற்கெனவே வீடுகள் கையளிக்கப்பட்டிருந்தன.

இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ரஞ்சித் டி சில்வா,  மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .