Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 மில்லியன் ரூபாய் இம்முறை 5 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி, இன்று வியாழக்கிழமை (15) தெரிவித்தார்.
அமைச்சருக்கு வழங்கப்படும் 5 மில்லியனுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பான கடிதங்கள் கிராமிய அமைப்புக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலைகள், அறநெறிப்பாடசாலைகள் மற்றும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதரத்துக்காகவும் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. திருகோணமலை கல்வி அமைச்சு கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மேற்படி நிதிக்குறைப்புப் பற்றித் தெரிவித்தார்.
கடந்த வருடம் இந்நிதி 10 மில்லியன் ரூபாயாக வழங்கப்பட்டு, மக்களால் முன்வைக்கப்பட்ட சிறிய பொதுப்பணிகளுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
இம்முறை நிதித் தட்டுப்பாடு காரணமாக, அது 5 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனைப்பயன்படுத்தி மக்களால் முன்வைக்கப்பட்ட சிறிய திட்டங்களுக்கு இன்று வழங்கப்படுகின்றன.
ஆனாலும் இந்நிதியை வழங்குமாறு, கிழக்கு மாகாண அமைச்சர்களாகிய நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது வழங்கப்பட்ட இந்நிதியை நீங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதனை விட, மாகாண உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியும் ஏலவே பகிர்தளிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
45 minute ago
27 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
27 Jul 2025