Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
'அரசியல்வாதிகளின் பின்னால் திரிவோர் தான் தற்போது அதிகமாக சிறைச்சாலைக்குச் செல்கின்றனர்' என, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, கிராமிய பொருளாதார, காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தெரிவித்தார்.
சிறைக் கைதிகள் தின விழா, சிறைச்சாலை அத்தியட்சகர் பிரசாத் ஹேமந்த தலைமையில், திருகோணமலை சிறைச்சாலை வளாகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (12) நடைபெற்றது. அதில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தற்போது நாட்டில் நல்லாட்சி நிலவிவருகின்ற நிலையில், நீதிமன்றங்கள் எல்லாம் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. அதனால் தீர்ப்புகள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.
சிறைக் கைதிகள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். சிறைக் கைதிகளும் மனிதர்களே, அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், கடந்த வருடத்தில் நானும் சிறையில் இருந்த பெண்மணியே தற்போது அமைச்சராக இருக்கின்றேன்.
திருகோணமலை மாவட்டத்தில் என்னால் முடியுமான உதவிகளை மக்களுக்காக செய்து வருகின்றேன்' என்றார்.
14 minute ago
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
28 Jul 2025