Thipaan / 2016 ஜூன் 20 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெசிறிகம காட்டுப்பகுதியில், 20 கசிப்புப் போத்தகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இருவரை, சனிக்கிழமை (18) கைது செய்ததாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 20 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், அவர்களை கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தில், இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், காட்டுப்பகுதியில் கசிப்புக் காய்ச்சி, அதனை விற்பனை செய்வதற்காக அப்பகுதியிலுள்ள குளம் ஒன்றினூடாக வள்ளத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்த போதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago