Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
கிழக்கு மாகாண ஆளுநர், நீண்டகாலமாகத் துன்பப்பட்ட இந்த சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தில் சிறந்த பங்களிப்பை கடந்த காலத்தில் நல்கியவர். எமது கட்சித் தலைமை மற்றும் கட்சியின் வேண்டுதலுக்கிணங்க, ஜனாதிபதியுடன் இணைந்து அவர் எடுத்த நடவடிக்கையை கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் நான் நன்கு அறிவேன் என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி தண்டாயுதபாணி தெரிவித்தார்.
அந்தவகையில், இந்த மண்ணில் இரண்டாவது தடைவையாக மீளக்குடியேற்றப்பட்ட 556 குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கிழக்கின் எழுச்சிக் கண்காட்சியின் 3ஆம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்த்தினராகக் கலந்து கொண்ட மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த மேடையில் முன்மாதிரியான இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றபோது, சில மாதங்களுக்கு முன்னர், இங்கு நடந்த மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டமை நினைவுக்கு வருகிறது.
அந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எமது தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மக்களை மீளக்குடியமரத்த முடிந்தது. அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக 556 குடும்பங்கள்; மீளக்குடியமரத்தப்பட்டன. முதல்கட்ட மீள் குடியமர்வில், சுமார் 50 குடும்பங்களைத் தவிர ஏனையோருக்கு பல நிறுவனங்களின் உதவியுடன் தற்காலிகக் கொட்டில்களை வழங்க முடிந்தது.
எமது அமைச்சினால் சில வாழ்வாதாரம் மற்றும் தொழில் உபகரணங்களை வழங்க முடிந்தது. ஆனாலும், பின்னர் குடியேற்றப்பட்ட 556 குடும்பங்களுக்கும் குறைந்தது தொழில் கருவிகளைக்கூட வழங்கமுடியாத நிலைமை நிலவுகின்றது.
நாங்கள், அமெரிக்கத் துதுவர் உட்பட பல நிறுவனங்களிடமும் தொடர்புகளை மேற்கொண்டோம் ஆனாலும் அந்த மக்களுக்கான தற்காலி வீடு வாழ்வாதார முயற்சிகளுக்கு நிதியை பெறமுடியவில்லை.
எனவே இந்த விடயத்தில் எமது ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுத்து நிதிகளை தேடித்தரவேண்டும். குறித்த மக்கள் மீழக்குடியேற்றப்பட்ட பகுதிக்கு நாம் செல்வதற்கு வெட்கமாகவுள்ளது. அவர்களுக்குரிய உதவிகளைச் செய்யாமல் இருப்பதனால் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago