2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

12 டொல்பின் மீன்களுடன் எட்டு பேர் கைது

Gavitha   / 2017 மார்ச் 08 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை உள் துறைமுக கடலில்,  12 டொல்பின் மீன்களைப் பிடித்து தோணியில் மறைத்து வைத்திருந்த எட்டு மீனவர்களை, திருகோணமலை பிராந்திய துர்நடத்தை பொலிஸ் பிரிவினர், இன்று (08) கைது செய்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த மீனவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரைவலை மூலம், பிற்பகல் 2 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் வெகுநேரமாகியும் கரைக்குத் திரும்பாதமையால், மீனவர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவர்கள் வரும் வரைக்கும், பொலிஸார், கரையில் காத்திருந்துள்ளனர். மீனவர்கள், இரவு கரை வந்தடைந்தவுடன், அவர்களது தோணியை சுற்றிவைத்த போது, 12 டொல்பின்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .