Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்
'தற்போது நாட்டின் மிக முக்கியமான இரண்டு கட்சிளும் சேர்ந்து கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பு திருப்திகரமானதாக அமையும் என நாம் நம்புகின்றோம். இந்த அரசியலமைப்பின் மூலம், இலங்கையிலுள்ள சகல இன மக்களும் நல்லிணக்கத்துடனும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்' என, எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில், செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இணைத் தலைவர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'1978ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் மக்களும் அங்கிகாரம் வழங்கவில்லை.
அதன்பின்னர், 1978க்கு பின்னர் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களும் அங்கிகாரம் வழங்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில், இலங்கையில் அரசியலில் முதல் முறையாக இந்த இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.
இதனடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ஜக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து அமைத்துள்ள இந்த ஆட்சியில் தயாரித்துவரும் புதிய அரசியல் யாப்பு, நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்' என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
39 minute ago
27 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
27 Jul 2025