Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியை மீளவும் கட்டியெழுப்புவது தொடர்பான கூட்டமொன்று கட்சியின் செயலாளர் கபீர் காசிம் தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடந்த வெள்ளிகிழமை இடம்பெற்றது.
இதன்போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன், கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய சிறிகொத்தவில் அலுவலகம் ஒன்றை அமைத்து, அவ்வலுவலகத்தின் ஊடாக கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுகொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025