Princiya Dixci / 2017 ஜனவரி 07 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 01 கிலோகிராம் கஞ்சாவை, முச்சக்கர வண்டியில் கொண்டுசென்ற புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுடைய இருவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முஹம்மட் ஹம்ஸா, நேற்று (06) உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் இருவரும், புல்மோட்டையில் இருந்து நிலாவெளிக்கு முச்சக்கர வண்டியின் பின் புரத்தில் வைத்து ஒரு கிலோகிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று அதிகாலையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டி உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
14 minute ago
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
23 minute ago
3 hours ago