2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'மேய்ச்சல்தரை இன்மையால் கால்நடை வளர்ப்பாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

கால்நடைகளுக்கு மேய்ச்சல்தரை இன்மையால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, கால்நடைகளுக்கு மேய்ச்சல்தரையை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தியில் இம்மாகாணத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள், 17 சதவீதத்தை தேசிய பால் உற்பத்தியில் பங்களிப்புச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

சம்பூர் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமாகிய விவசாயக் கண்காட்சியின் இறுதி நாளான  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சம்பூர் பிரதேசத்தில் விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது என்றால், அதற்கு  இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும்  எடுத்த நடவடிக்கையே ஆகும். அவர்கள் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்பிரதேச மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விவசாயக் கண்காட்சியும் நடத்தப்பட்டது'; என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X