2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மாரடைப்பால் இந்திய புடைவை வியாபாரி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 23 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, பொன் ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தில் இந்திய புடைவை  வியாபாரி ஒருவர் மாரடைப்புக் காரணமாக புதன்கிழமை (22) மாலை உயிரிழந்துள்ளார்.

இந்தியா, தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த திலகர் அலஸ் சுபையன் மணிக்கந்தன் (வயது 52) என்ற இந்த வியாபாரி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புடைவை வியாபாரத்துக்காக இந்தியாவிலிருந்து வந்த இந்த வியாபாரி, திருகோணமலை, அன்புவெளிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து ஒரு வருடமாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .