2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

13ஐ ஒழிக்கும் முயற்சியை கைவிடவும்: திருமலை நகர சபையில் தீர்மானம்

Super User   / 2013 ஜூன் 25 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

13 ஆவது அரசமைப்புச்சட்டத்திருத்தை ஒழிக்கும் முயற்சியைக் கைவிட்டு தமிழ் பேசும் மக்களுக்கு நிலைத்து நிற்கக்கூடியதும் நியாயமானதுமான அதிகாரப்பகிர்வை வழங்கி அம்மக்களின் அரசியல் அபிலாiஷகளை பூர்த்தி செய்யும்படி திருகோணமலை நகரசபை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைக் கோரியுள்ளது.

இது தொடர்பான பிரேரணை ஒன்று கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற திருகோணமலை நகரசபையின் ஜுன் மாதக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாதாந்த கூட்டம், நகரசபைத்தலைவர் க. செல்வராசா தலைமையில் நடைபெற்றது. பிரேரணையை உறுப்பினர் கோ. சத்தியசீலராஜா முன்மொழிந்தார் உறுப்பினரான த. கௌரிமுகுந்தன் பிரேரணையை வழிமொழிந்தார். நகரசபைத்தலைவர் க. செல்வராசா தலைமை வகித்தார். பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

திரு. சத்தியசீலராஜா பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் கூறியதாவது:-

"1987 ஆம் ஆண்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்ட 13 ஆவது அரசமைப்புத்திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களையும் வரபிரசாதங்களையும் கடந்த 25 ஆண்டுகளாக பெரும்பான்மையின மக்களும் அனுபவித்து வந்தனர்.

தற்போது வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படவிருக்கும்போது 13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் அதிகாரங்களைக்குறைக்க வேண்டும் என்றும் பேரினவாதிகள் குரல் எழுப்புகின்றனர்.

இந்த நடவடிக்கை இனங்களுக்கு இடையேயான நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கிழைக்கும். அத்துடன் இனவிரிசலையும் ஏற்படுத்தும். எனவே ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாiஷகளை நிறைவேற்றக்கூடியதான அதிகாரப்பரவலாக்கல் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X