2026 மார்ச் 28, சனிக்கிழமை

174 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்

Gavitha   / 2014 நவம்பர் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் நீண்ட காலமாக காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்து வந்த குடும்பங்களுக்கு, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் 174 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கலந்த கொண்டனர். 

சிறப்பு அதிதிகளாக, உதவிப் பிரதேச செயலாளர் யூ.அஜீதா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .