2025 ஜூலை 09, புதன்கிழமை

கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் திருமலையில் மாநாடு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக  மீளாய்வு செய்யும் உயர்மட்டக் கூட்டமொன்று  நாளை திங்கட்கிழமை திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

திருமலை கடற்படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம்பெறும் இக்கூட்டத்திற்கு ஆளுநர், அமைச்சர், மாகாண முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் 'கிழக்கின் உதயம்' என பெயரிடப்பட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இவபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கிலேயே இம்மாநாடு இடம்பெறுவதாக மாகாண பிரதம செயலாளர் வி.வி.பாலசிங்கம் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .