2025 ஜூலை 09, புதன்கிழமை

கோழிகளிடையே பரவும் நோய்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

கந்தளாய் பிரதேசத்தில் வளர்ப்புக் கோழிகளுக்கு புதிய வகையான நோய் தீவிரமாக பரவி வருகின்றது.

இத்தகைய நோயின் தாக்கங்களுக்குள்ளாகும் கோழிகள் உறக்கம் கொண்டு பெரும்பாலும் ஓரிரு தினங்களில் இறந்து விடுகின்றன.

இந்நோயின் தாக்கம் கந்தளாய் பிரதேசத்தில் பேராலு, ஜெயந்திபுர, சூரியபுர, வானெல மற்றும் வட்டுக்கச்சி போன்ற பல பகுதிகளில் பெருகிக் காணப்படுகின்றது.

இதனால் இப்பிரதேசத்தில் கோழிகளின் விலை சரிந்து காணப்படுவதோடு, இக்கோழிகள் நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கு முன்னர் உணவுக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .