Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்குமார்)
திருகோணமலை நகர சபையின் முன்னாள் தலைவர் ச.கௌரி முகுந்தனால் விநியோகிக்கப்பட்ட காணிகளின் உரிமைகளை ரத்து செய்து மீண்டும் சட்டரீதியான உரிமைப்பத்திரம் வழங்கப்பட வேண்டுமென நகர சபை உறுப்பினர் சி.கரிகாலன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
நகர சபையின் தலைவர் ச.கௌரிமுகுந்தன் காணி வழங்கிய குற்றச்சாட்டுக்கள் அடங்கலாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதன் விசாரணை முடியும் வரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் பணிப்பில் அவரது செயலாளரால் இடைநிறுத்தம் செய்யப்பட்டள்ளார்.
நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதனை மற்றொரு உறுப்பினர் க.அருட்செல்வன் வரவேற்றிருந்தார்.சபையின் உறுப்பினர் திருமதி கண்மணிஅம்மா இரத்தனவடிவேல் இத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago