2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திருமலையில் பல்துறைசார் புலமையாளர்கள் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 01 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சர்வதேச இந்து மதபீடம் திருகோணமலையில் பல்துறை சார்ந்த புலமையாளர்கள் 17 பேரை கௌரவித்தது. பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் சோமாஸ்கந்த குருக்கள் ஞாபகார்தமாக சோமஸ்கந்த மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆன்மீகம், சோதிடம், கலை, ஊடகம், சமூகசேவை, ஆலய பரிபாலனம் ஆகியவற்றில் புலமைபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர். திருகோணமலை ஆன்மீக பெரியார் பொ.கந்தையா காந்தி மாஸ்ரரும் கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.

இந்நிகழ்வில் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் பிரதம குரு சோ.ரவிச்சந்திர குருக்கள் சர்வதேச இந்து மதபீடத்தின் திருகோணமலை கிளைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நியமனம் கடிதம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அவருக்கு சிவாகம வித்தியாஜோதி பட்டமும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X