2025 மே 15, வியாழக்கிழமை

குடில்கள் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு எதிராக கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கடந்த திங்கட்கிழமை கிண்ணியா கண்டல் காடு பகுதியில் 35க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் குடில்கள் தீக்கிரையாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக  ஆர்ப்பாட்டமொன்று இன்று  ஜும் ஆ தொழுகையின் பின்னர் கிண்ணியா புஹாரி சந்தியில் இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ்வார்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொன்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரை கண்டிக்கும் வகையிலான கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் கண்டன வாசகங்கள் எழுதிய  பாதகைகளும் எடுத்துச் செல்லப்பட்டன.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் கிண்ணியா, கண்டல் காடு பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்கள் தற்காலிக கொட்டில் அமைந்து தங்கியிருந்தனர்.

எனினும் கடந்த திங்கட்கிழமை அவர்களின் கொட்டில்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் பயிர்களும் சேதமாக்கப்பட்டன.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .