2025 மே 15, வியாழக்கிழமை

விசேட பிரார்த்தனை வழிபாடுகள்

Kogilavani   / 2010 நவம்பர் 20 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.சசிக்குமார்)

திருகோணமலையில் காணாமல்  போனவர்களின்  பெற்றோர்களும் உறவினர்களும் அவர்களை விடுதலை செய்யக்கோரியும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவி காலத்திற்கு ஆசி வேண்டியும்,  இன்று காலை பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆசியுனூடாக ஜனாதிபதி தமது உறவுகளை விடுவிப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள்  பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.

அன்புவழிபுரம் ஞானவைரவர் ஆலயம், அன்புவழிபுரம் மாதா தேவாலயம்,  திருகோணமலை கண்டி வீதி அபேபுரத்தில் அமைந்துள்ள புதிய சிலைக்கு முன்பாகவும் இவ்வழிபாடுகளிலும் பிரார்த்னைகளிலும் ஈடுப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .