2025 மே 15, வியாழக்கிழமை

திருமலையில் ஆசிரியர்கள் இடமாற்றம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 24 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கல்வி வலயத்தில் இருந்து 268 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும், 33 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் கே.முருகுப்பிள்ளை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் சுற்று நிரூபத்திற்கு அமைய இவ்விடமாற்றங்கள் செய்யப்படுகின்றது. பாடசாலை ஒன்றில் தொடர்ச்சியாக 8 வருடங்களுக்கு மேல் சேவையாற்றும் 53 வயதுக்கு  உட்பட்டவர்களே இவ் இடமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2011 ஜனவரி மாதம் முதலாம் திகதி அவர்கள் புதிய பாடசாலையில் கடமையினைப் பொறுப்பேற்க வேண்டும். இடமாற்றத்திற்கு எதிரான மேன்முறையீடுகளைச் செய்ய வீரும்புவோர் தமது விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக வலயக் கல்வி பணிப்பாளருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .