2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மழையால் இடம்பெயர் கிழக்கு மூதூர் மக்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில்  நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள  மக்கள் தொடரும் மழை காரணமாக பல அசௌகரியங்களுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது. 

 
கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் போன்ற இடங்களிலுள்ள நலன்புரி நிலைய மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் தலைவர் குமாரசுவாமி நாகேஸ்வரன் குறிப்பிடுகையில், கிளிவெட்டியில் 570 குடும்பங்களும் மணற்சேனையில் 90 குடும்பங்களும் பட்டித்திடலில் 230 குடும்பங்களும் கட்டைபறிச்சானில் 372 குடும்பங்களும் இடம்பெயர்ந்த நிலையில் 7 வருடங்களுக்கும் மேலாக சிரமங்களுடன் வசித்து  வருகின்றனர்.

தற்போது பெய்கின்ற  மழையால்,   இவர்கள் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். உலக உணவுத்திட்டம் தவிர வேறு எந்த ஆதாரமுமின்றி இம்மக்கள் துன்பப்படுகின்றனர். இவ்உலக உணவுத்திட்ட நிவாரணமும் அடுத்த  தை மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளதாக அண்மையில் பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூதூர் கிழக்கிலுள்ள சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கும் இடம் தவிர்ந்த சம்பூர் கூனித்தீவு கிராம பகுதிகளிலாவது மீள்குடியேற  அனுமதியுங்களென்று அம்மக்கள் கூறுகின்றனர். ஆனால், அரசு வேறிடங்களில் குடியமருமாறு கோரிக்கை விடுக்கின்றது.  இடம்பெயர்ந்த மூதூர் கிழக்கு மக்கள் தொடர்ந்து  அதனை நிராகரித்து வருகின்றனர்.

இம்மக்கள் துன்பங்களிலிருந்து விடுபட   சம்பந்தப்பட்டவர்கள் உதவவேண்டும். அதிகாரிகள் பலமுறை வந்து பேசினாலும் ஒரே விடயத்தையே தொடர்ந்து கூறி வருகின்றனர். மேற்கொண்டு மாற்று முடிவுகளை உயர்மட்டமே எடுக்க வேண்டுமென நலன்புரி நிலையங்களுக்கு வருகை தரும் அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .