2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிவானந்த தபோவன சிறுவர்களுக்கு இலவச வங்கி வைப்பு

A.P.Mathan   / 2010 நவம்பர் 27 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

பிரித்தானியா சிவதர்மம் அமைப்பினால் திருகோணமலை சிவானந்த தபோவனத்தை சேர்ந்த சிறுவர்கள் 20பேருக்கு வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபாய்கள் வைப்புச் செய்யப்பட்டு இவை வழங்கப்பட்டன. லண்டனில் இருந்து வருகைதந்த சிவதர்மம் உறுப்பினர் க.நிமலன் இதனை இன்று சனிக்கிழமை மதியம் வழங்கி வைத்தார். இதுபோன்று கடந்த மாதம் 15 சிறுவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சிவானந்த தபோவனம் சிறுவர் இல்லத்தில் இன்றுவரை 83 சிறுவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இவ்வாறு வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்;ட தொகை வைப்பு செய்ய தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .