Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள மீனவர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக திருகோணமலை துறைமுக பொலிஸாரல் சந்தேகத்தின் பேரில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த எட்டாம் திகதி திருகோணமலை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக 5 மீனவர்கள் படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
இவர்களில் தாங்கள் நால்வரும் நித்திரை செய்திருந்த வேளையில் ஒருவர் படகினைச் செலுத்தியதாகவும் தாங்கள் வெள்ளிக்கிழழை கண்விழித்த போது படகு செலுத்துவார் இன்றி மிதந்து கொண்டிருந்ததாகவும் இம்மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
படகினைச் செலுத்தியவருக்கு என்ன நடந்தது என்று தங்களுக்குத் தெரியாது எனவும் தாங்கள் உடனடியாக கரை திரும்பியதாகவும் அவர்கள் துறைமுக பொலிஸில் சனிக்கிழமை காலை முறைப்பாடு ஒன்றினைச் செய்திருந்தனர்.
இவ்விடயத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் மேற்படி நால்வரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
31 minute ago
2 hours ago