Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வெளிநாடு சென்றுள்ளாதாலேயே கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பதில் முமைச்சராக சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பும் வரை நிதி. திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, உள்ளுராட்சி, பிராந்திய நிர்வாகம், மனிதவலு, புனர்வாழ்வு, மீள்குடியமர்த்தல், கிராமிய அபிவிருத்தி, சுற்றுலாத்துறை, சுறறாடல் அமைச்சராகவும் எம்.எஸ்.உதுமாலெப்பை செயற்படுவார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதியும் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025