2025 மே 15, வியாழக்கிழமை

கிண்ணியாவில் வெடிப் பொருட்கள் மீட்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், சுபுன்டயஸ், எம்.பரீட் )

கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கருகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 4 ½   கிலோ நிறையுடைய 3 கிளைமோர்கள்,  5 மிதிவெடிகள்,  5 கைக்குண்டுகள் ,  80 டெட்டனேட்டர் குச்சுகள்,  சி-4 ரக 1800 கிராம் வெடிமருந்து என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருகோணமலை சீனக்குடா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர்  ரத்மல் பண்டாரவின் வழிக்காட்டலில்  சீனக்குடா பொலிஸ் அதிகாரி ஆர்.கே.அனுரபிரேமரட்ன தலைமையிலான குழுவினர்  நேற்று மாலை இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸாரும் சீனக்குடா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .