2025 மே 15, வியாழக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி பால் வியாபாரத்துக்கு தடை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் அனுமதிபத்திரம் இன்றி பால் வியாபாரத்தில் ஈடுபடவேண்டாம் எனவும், அனுமதிபத்திரமற்ற வியாபாரிகளிடம் இருந்து பொது மக்கள் பாலைக் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளிக்கிழமை  காலை பால் வியாபாரிகளை பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை செய்தனர். இதன் போது அவர்களால் விற்பனைக்காக வைத்திருக்கும் பாலில் மூன்றுக்கு இரண்டு பங்கு நீர் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து 60 லீற்றர் வரையான பால் கைப்பற்றப்பட்டு நீரேரியில் கொட்டப்பட்டதாகவும் பிரதேச சபையின் தலைவர் த.காந்தரூபன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .