2025 மே 14, புதன்கிழமை

மாணவர்களின் மாதிரி சந்தை கண்காட்சி

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய 5ஆம் ஆண்டு மாணவி;களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி சந்தை கண்காட்சி இன்று சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கண்காட்சியை காலை 9 மணிக்கு வித்தியாலய அதிபர் ஏ.ஜே.றூமி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களும் ஏனைய மாணவிகளும் கண்காட்சியைப் பார்வையிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

5ஆம் தர மாணவிகளின் பொறுப்பாசிரியர்களான ஏ.எச்.சுமையா, எம்.ரி.நளீரா, எம்.இசட்.எப்.பர்ஹானா ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இவ்வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .