2025 மே 14, புதன்கிழமை

மூதூர் உப மின் அலுவலக விநியோக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மின் தடை

Super User   / 2011 மார்ச் 06 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை, மூதூர் உப மின் அலுவலக விநியோக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மின்சாரம் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை, 9ஆம் திகதி புதன்கிழமை மற்றும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மின்சாரம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேசத்திலுள்ள  தோப்பூர், கிளிவெட்டி, சம்பூர் மற்றும் பாலத்தோப்பூர் போன்ற பகுதிகளிலும்  சேறுவில பிரதேசத்தில் சேறுநுவர, ஈச்சிலம்பற்று, வெருகல் போன்ற பகுதிகளிலும் மின்சார விநியோக தடைசெய்யப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட மின் பொறியியலாளர் பந்துல தேசப்பிரிய தெரிவித்தார்.

காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணி வரை இம்மின் தடை அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

பிரதான மின் இணைப்புக்களில் திருத்த வேலைகள் காரணமாகவே மின் துண்டிக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் பந்துல தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .