Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 09 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
இலங்கை அதிபர் சேவை வகுப்பு – i , வகுப்பு – ii மற்றும் வகுப்பு – iii ஆகியவற்றுக்கான தடை தாண்டல் பரீட்சையை பிற்போடுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பரீட்சை ஆணையாளரை கோரியுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்கவுக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய பொதுச் செயளாலர் எம்.அனஸினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அவசரக் கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் சேவையில் மூன்று வகுப்புக்களுக்குமான முதலாம் மற்றும் இரண்டாம் தடை தாண்டல் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமையன்று கொழும்பில் நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, குறித்த அதிபர் சேவையில் உள்ளவர்களில் அநேகர் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுவரும் நிலையில் தற்போது உள்ளூராட்சி தேர்தல் கடமை சம்பந்தமான செயலமர்வு முதலானவற்றில் கலந்து கொள்வதனாலும் பரீட்சைக்கு ஆயத்தமாவதற்கு போதிய அவகாசம் இல்லாத நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் ஆகவே அதிபர் சேவைக்கான தடை தாண்டல் பரீட்சை நடத்தும் திகதியை பிற்போடுமாறும் அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
39 minute ago
50 minute ago
56 minute ago