Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 09 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குர்ஆன் மத்ரஸாக்களுக்கான தேசிய பொதுப்பாடத்திட்ட வெளியீட்டு விழா கிண்ணியாவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமையன்று 9 மணியளவில் கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள வைபவத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாக்களுக்கு திணைக்களத்தினால் பொதுப் பாடத்திட்டப் பிரதிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர் உட்பட இருவர் கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எச்.நூருல் அமீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டில் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பொதுப்பாடத்திட்டம் இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புடன் திருத்தி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்தே இப்புதிய பொதுப்படத்திட்டம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
33 minute ago
44 minute ago
50 minute ago