2025 மே 14, புதன்கிழமை

யு.எஸ்.எயிட் பிரதிநிதிகள் - கி.மா. முதலமைச்சர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் திருகோணமலைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, சிறு முயற்சியாளர்களின் தொழில்த்துறைகளை ஊக்குவிப்பது ஆகியன தொடர்பில்   கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

எதிர்காலத்தில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்படும் சுற்றுலாத்துறை அபிவிவிருத்தி நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதாகவும் யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X