2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவா)

திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று புதன்கிழமை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக சுமார் 25  தொண்டர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  தெரிவிக்கையில்,

'நாங்கள் 8 வருடங்களுக்கும் மேலாக திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்  தொண்டர்களாக பணியாற்றி வருகின்றபோதிலும்,  எங்களுக்கான நிரந்தர நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி உட்பட பலருக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனாலும், திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அண்மையில் வேலைவாய்ப்புப் பெற்று வந்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதம், ஒரு வருடமென கடமையாற்றிய புதிய தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 8 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும்' என்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X