2025 மே 02, வெள்ளிக்கிழமை

அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 03 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில், கியாஸ் ஷாபி)


திருகோணமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான   இரண்டு நரள் பயிற்சி செயலமர்வு  நேற்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஓழுங்கு செய்யப்பட்ட இச்செயலமர்வு, ஈரான் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் நடைபெறுகிறது.

திருகோணமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் உபதலைவர்  மௌலவி வை.ஹதியத்துல்லா தலைமையில் கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயத்தில்   ஆரம்பமான  இச்செயலமர்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி, ஈரான் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அஷ;ன்ஷய்க். ரிலா ஹக்கி, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எச்.நூருல் அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X