2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையில், ஸ்ரீ.சு.க. கிளைகளை புனரமைப்பது தொடர்பிலான விசேட கூட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 17 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளை புனரமைப்பு செய்து கட்சியை தேசிய மட்டத்தில் மீள்கட்டுமானம் செய்வதற்கான தேசிய வேலைத் திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான செயற்திட்ட விசேட கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் திருமதி.பிலோமினா அக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்ததுடன் கட்சியின் உறுப்புரிமை அட்டையை திருமதி.சுசந்த புஞ்சிநிலமேயிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் உற்பத்திதிறன் அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் செனவிரெட்ன, மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, குருநாகல், பொலநறுவை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

திருகோணமலை தேர்தல் தொகுதி முழுவதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை சேர்க்கும் விசேட செயல்திட்டம் நேற்று சனிக்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X