2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் தோல்விப் பயணம் கிழக்கு தேர்தலில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்: சுரேஸ் எம

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்)

'ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் குடும்ப ஆட்சி கிழக்கு மக்களின் வாக்குப்பலத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும். தென்மாகாணசபையில் ஏற்பட்ட தோல்வியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விப் பயணம் ஆரம்பித்தது போல் ராஐபக்ஷ குடும்ப ஆட்சியின் தோல்விப் பயணம் கிழக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியுடன் ஆரம்பித்து வைக்கப்படல் வேண்டும்' என்று இன்று இரவு திருகோணமலையில் இடம்பெற்ற த.தே.கூ.வின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

'இந்த அரசாங்கம் தோற்கடிக்கப்படல் வேண்டும். அது கிழக்கில்தான் ஆரம்பிக்கப்படல் வேண்டும். ராஐபக்ஷ தோற்பதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைய வேண்டும். ராஐபக்ஷவின் தோல்வி கிழக்கிலிருந்தான் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

இதுவரை இனப்பிரச்சினைக்கு தமிழர் தரப்புடன் பேசுங்கள் என்றுதான் சர்வதேச சமூகம் கூறிவந்தது.
ஆனால் இப்போது இந்தியா உட்பட சகல சர்வதேச அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுங்கள் என்று கூறத்தொடங்கியுள்ளன.

அத்தகைய நிலை இன்று உருவாகியுள்ளது. இந்த நிலையை வலுப்படுத்த நாம் கிழக்கை வெற்றிகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இதுவரை நாம் நாடாளுமன்றத்தின் மூலமும், சர்வதேசத்திடமும் பேசினோம். இப்போது மாகாணசபை அமைப்பின் ஊடாக உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் பேசக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. அதனை நாம் தவறவிடக்கூடாது என்று அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .