2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அடுத்தகட்ட நகர்வு குறித்து பரிசீலிக்கின்றோம்: சம்பந்தன்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

இந்த நிலையில் அடுத்தகட்ட  நகர்வு குறித்து  பரிசீலித்து வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் அடுத்தகட்ட  அணுகுமுறை எவ்வாறாக இருக்கும் என்று வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்னொரு ஆசனத்தை கூடுதலாக பெற்றிருக்கலாம். பொதுவாக தமிழ் வாக்காளர்கள் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நன்றாக வாக்களித்துள்ளார்கள் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


  Comments - 0

  • aj Sunday, 09 September 2012 06:12 AM

    தமிழர்களின் வாக்குவிதம் அதிகரித்து காணபடுகிறது.
    அளிக்கப்பட்ட வாக்கில் 80 -90 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
    ஒரு தெளிவான செய்தி சில கோஷ்டிகளுக்கும் அரசுக்கும் மீண்டும் எங்கள் கிழக்கு தமிழர்கள் சொல்லி நிக்கிறார்கள். தமிழர்கள் எப்போதும் தமிழ் தேசியதுடனே.
    ஆட்சி அமைப்பது ஏதும் நடக்கலாம்.
    ஹிக்கீம் தமிழர்களுடன் சேர்ந்து ஒரு முடிவை எடுப்பாராக இருப்பார் என்றால் அது சிறுபான்மை மக்களின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பாதை திறக்கபடுகிறது என்று பொருள். ஆனால் ஹிக்கீம் அரசுக்கு ஆதரவு கொடுப்பதுக்கான சந்தர்ப்பம் நிறையே இருக்கிறது. கிழக்கில் பேசிய எல்லாம் அடகு வைத்து சேரலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .