2025 மே 07, புதன்கிழமை

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்

Super User   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்,  ரமன்)
 
கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கினங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி 14,224 வாக்குகளையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன 12,393 வாக்குகளையும் முன்னாள் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் 11,726 வாக்குகளையும் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி 20,850 வாக்குகளையும் குமார்சுவாமி நாகேஸ்வரன் 10,910 வாக்குகளையும் யாழ். பல்கலைக்கழக மாணவரான ஜெஹதீஸன் ஜனார்த்தனன் 8,560 வாக்குகளையும் பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ரம்ழான் அன்வர் 10,904 வாக்குகளையும் ஹசன் மௌலவி 10,123 தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கிண்ணியாவை சேர்ந்த இம்ரான் மஹ்ரூப் 10, 048 வாக்குகளையும்  அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர 7,303ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • Rav i Sunday, 09 September 2012 09:01 AM

    இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.................

    Reply : 0       0

    ச. ஜேசுநேசன் Sunday, 09 September 2012 09:41 AM

    திரு தண்டாயுதபாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    AJ Sunday, 09 September 2012 10:27 AM

    வாழ்த்துக்கள்
    ஆட்சி அமைக்கும் பெரும்பனமை இல்லாவிட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்.

    Reply : 0       0

    sharafdeen colombo 2 Sunday, 09 September 2012 03:51 PM

    யூ என் பி சார்பில் வெற்றி பெற்ற இம்ரன் மஹ்ரோஃப் க்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    nimalan Sunday, 09 September 2012 04:11 PM

    இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஏனையோர் விபரம்.

    Reply : 0       0

    mohamed Monday, 10 September 2012 04:28 AM

    ஐயா. இது உங்களுக்கே அடுக்குமா? நீங்கள் சந்தித்துள்ள தோல்வி மிகப்பெரிது. அதை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X