2025 மே 07, புதன்கிழமை

திருமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன கடமை பொறுப்பேற்றார்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

 
திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன, இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கான வரவேற்பு நிகழ்வு திருகோணமலை பொலிஸ் தலைமையக மைதானத்தில் நடைபெற்றது.

திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்த்தன தலைமையில் இந்நிகழ்வு  நடைபெற்றது. இதன்போது திருகோணமலை பொலிஸாரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினையும் புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்
ஏற்றுக்கொண்டார்.

1990ஆம் வருடம் ரவி விஜயகுணவர்தன  திருகோணமலை பொலிஸ் பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X