2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் பாரிய சாத்வீகப் போராட்டம் ஆரம்பமாகும்: சம்பந்தன்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 28 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


தமிழ் பேசுகின்ற மக்கள், தாங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற தாயகத்தில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்று ஒருமித்த நாட்டில் காணப்படாத நிலை தொடருமானால், பாரிய சாத்வீகப் போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நாம் பின்னிற்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 11 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு கூறினார். திருகோணமலை நகர மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் நிலையானதும் நிரந்தரமானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு கட்டாம் ஏற்படும். இதில் சர்வதேசம் உறுதியாக இருக்கின்றது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் புதிய கிழக்கு மாகாண சபையின் 11 உறுப்பினர்களும் திருகோணமலை புனித மரியாள் தேவாலயம், மூர் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாயல் மற்றும் ஆலடி விநாயகர் ஆலயம், காளி கோவில் ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

சம்பந்தன் முன்னிலையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.


  Comments - 0

  • நகுலேந்திரன் Saturday, 29 September 2012 02:07 AM

    காலம் போய்க்கொண்டே இருக்கு நாமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்... முடிவு வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறியது போலத்தான்....

    Reply : 0       0

    meenavan Saturday, 29 September 2012 02:59 AM

    ஐயா எங்கள் முஸ்லிம் தலைமைகளுக்கும் அழைப்பு விடுங்கள். நிச்சயம் அவர்கள் மதில் மேல் பூனையாகி விடுவார்கள்..???????

    Reply : 0       0

    Mohan Saturday, 29 September 2012 03:46 AM

    மீண்டும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல மக்களை தள்ளாதீர்கள்! மக்கள் மனத்தால் நொந்து போய் விட்டார்கள். காலம் என்றும் ஒரே மாதிரியாய் இருக்காது...

    Reply : 0       0

    aj Saturday, 29 September 2012 06:47 AM

    இப்போது நீங்கள் கஷ்டப்பட்டு தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொண்டுவந்த வீடு திட்டத்திலும் பலரின் செல்வாக்கு செலுத்தி தமிழர்கள் ஓரம்கட்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். முதலில் நீங்கள் இதை பாருங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .