2025 மே 08, வியாழக்கிழமை

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு கிண்ணியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)

இன்று சர்வதேச சமுத்திர தினமாகும். இத்தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வீதி ஊர்வலமொன்றை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த உயர்தரப் பிரிவு புவியியல் பாட மாணவர்களால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமதி என்.எஸ்.அமீன்வாரி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இயற்கையின் அருட் கொடைகளைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரை வாழ வைப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இப்பாடசாலையின் புவியியல் பாட ஆசிரியர் எம்.ரீ.நிஹாராவின் வழிகாட்டலின் கீழ் இவ்வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X