2025 மே 08, வியாழக்கிழமை

இரண்டாவது கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், ரமன்)


இரண்டாவது கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணசபை கட்டிடத்தில் ஆரம்பமாகியது.

இதன்போது, சபையின் செயலாளரால் ஆளுநரின் கடிதம் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து, சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் பதவிகளுக்கான தேர்வு இடம்பெற்றது.

சபையின் தவிசாளராக ஆரியவதி கலப்பதி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இவரை முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் பிரேரிக்க, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆமோதித்தார்.

உதவித் தவிசாளராக முன்னாள் மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஏகமனதாகத் தெரிவானார். இவரை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரேரிக்க, மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆமோதித்தார்.

இதனையடுத்து உத்தியோபூர்வமாக தவிசாளரும், உதவித் தவிசாளரும் தமது பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

இதன் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறுவதற்காக - சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபையினை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X