2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணசபையின் இரண்டாம் நாள் அமர்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)
கிழக்கு  மாகாணசபையின் இரண்டாம் நாள் அமர்வு இன்று  செவ்வாய்க்கிழமை  காலை 9.30 மணிக்கு சபைத் தலைவர்  ஆரியவதி கலபதி தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது திவிநெகும சட்டமூலப் பிரேரணையை  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீது முன்மொழிந்நதார்.  வீதி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை இம்முன்மொழிவை வழிமொழிந்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சிங்காரவேலு தண்டாயுதபாணி சட்டமூலம் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் கிழக்கு  மாகாணசபை எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் பற்றியும் நீண்ட உரையை ஆற்றினார்.  இதனைத் தொடர்ந்து சபை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆரியவதி கலபதி இன்று செவ்வாய்க்கிழமை தனது அலுவலக பதிவேட்டில் ஒப்பமிட்டு அலுவலக செயற்பாடுகளை ஆரம்பித்தார்.

மாகாண சபையின் இரண்டாம் நாள் அமர்வு  தேநீர் இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்ட போதே இந்நிகழ்வு உத்தியோகப்பூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா, வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை  ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X