2025 மே 08, வியாழக்கிழமை

திவிநெகும சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

Super User   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன், சி.குருநாதன்)

திவிநெகும உத்தேச சட்டமூலம் மேலதிக ஆறு வாக்குகளினால் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த உத்தேச சட்டமூலத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த உத்தேச சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிராக வாக்களித்துள்ளன.

இச்சட்டமூலம் தொடர்பில் எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடிய பின்னர் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழு தலைவர் ஏ.எம்.ஜெமீல் அறிவித்தார்.

இதனையடுத்தே இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது ஆறு மேலதிக வாக்குகளினால் திவிநெகும உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 02 October 2012 11:50 AM

    ஒரு காலம் வரும் தகுதி அற்றவர்கள் தலைமை பதவிக்கு வருவார்கள்,அதன் விளைவுகளின் பிரதி பலன்களை சமூகம் அனுபவித்தே ஆக வேண்டும், மு.கா.வின் சோரம் போகும், சரணாகதி அரசியலின் மற்றுமொரு கண்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மு.கா.வின் நான்கு உறுப்பினர்கள் புதுமுகமாக உள்ள நிலைமையில் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் கால அவகாசம் பெற்றிருக்கலாமே?

    Reply : 0       0

    farzan.AR Tuesday, 02 October 2012 02:30 PM

    எந்தவித மக்கள் அரசியலிற்குள்ளும் நாங்கள் செயற்படத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது முகா. மீளவும் ஒரு தடவை தன்னை மக்களிடமிருந்து விலக்கி கூஜாத்தூக்கியாக அடையாளமிட்டுள்ளது. எவன் எதைப்பறித்து அதிகாரத்தை மீளவும் கொழும்பை நோக்கி எடுத்துக் கொண்டாலும் எனக்கென்ன? என்று நாம் வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் சத்தியமிட்டுள்ளனர். நாமோ வெட்கமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் இதே கேவலமான அரசியலை அங்கீகரித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

    Reply : 0       0

    rafeek Tuesday, 02 October 2012 03:12 PM

    மு.கா. உம் அதன் தலைமையும் அழியும் நிலைக்கு நெருங்குகிறது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X