2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நடும் விழா

Super User   / 2012 ஒக்டோபர் 14 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


முள்ளிப்பொத்தானை அல் - ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மஹிந்தோதய ஆய்வு கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஜீப் ஏ. மஜீத் கலந்துகொண்டு அடிக்கல் நட்டினார். இதன்போது, தம்பலகாமம் பிரதேச மக்களும் பாடசாலை சமூகமும் இணைந்து முதலமைச்சருக்கு வரவேற்பளித்தனர்.

இதேவேளை, கிராமத்துக்கு ஒரு வேலை கருத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிக்கும் தலா 10 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.

கடற் தொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயினால் இந்த வேலைத்திட்டங்கள் நேற்;று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .