2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு முதலமைச்சருக்கு சொந்த ஊரில் வரவேற்பு

Super User   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி, எம்.பரீட்)


கிழக்கு முதலமைச்சருக்கான வரவேற்பும் கிண்ணியா வலய பாடசாலைகளின் பரிசளிப்பு விழாவும் முதலமைச்சரின் சொந்தவூரான கிண்ணியாவில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
 
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் கல்விச் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வைபவம் வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.காசிம் தலைமையில் நடைபெற்றது.
 
முதரலமைச்சரின் வரவேற்பு ஊர்வலம் கிண்ணியா சுனாமி சந்தியில் இருந்து ஆரம்பமாகி பிதான வீதி வழியாக வந்து கிண்ணியா மத்திய கல்லூரியை வந்தடைந்தது
 
இதன்போது, ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கிண்ணியா அல் - இர்பான் வித்தியாலயம் மற்றும் கிண்ணியா அல் - அக்ஸா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வகுப்பறை கட்டடத்துக்காக முதலமைச்சரால் அடிக்கல் நடப்பட்டது.

இதன் பின்னர், மத்திய கல்லூரியின் அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்வருடம் பாடவிதானம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வலய, மாகாண, தேசிய மட்டங்களில் சாதனை படைத்த மாணவாகள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், கிண்ணியா வலயத்தின் 61 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.  இந்நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஜ.எம்.மன்சூர், எம்.எஸ்.உதுமாலெப்பை விமலவீர திஸ்ஸநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .