2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியே எனது கனவாகும்: முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி)

இந்த நாட்டின் நீடித்த, நிலையான அபிவிருத்திற்கு இனங்களுக்கிடையிலான சக வாழ்வுடன் கூடிய சமாதானமும் மனித உழைப்போடு திட்டமிடப்பட்ட கல்வியுமே அவசியமாகும். கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியே எனது கனவாகும். இதற்கு சிறந்த உதாரணமாக கிழக்கு மாகாணம் திகழ்கின்றமை இங்கு வாழும் மூவின மக்களுக்கும் பெருமை மிகுந்த விடயமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இன்று கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற கிண்ணியா வலயப் பாடசாலைகளின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.காசிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சா் தொடர்ந்து உரையாற்றுகையில்...

பாடசாலை தரவிருத்தியை ஏற்படுத்துவதற்கு அதிபர்கள் சிறந்த முகாமையாளர்களாக மாற வேண்டும். அவ்வாறானால் தான் தேசிய கல்விக்குறிக்கோள்களை ஒவ்வொரு பாடசாலையும் அடையும்.

கிழக்கு மாகாணத்தின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமை என்னைச் சேர்ந்தது என்றாலும் நான் மூவின மக்களுக்கும் உரிய முதலமைச்சராக எனது பணியைச் செய்யக் காத்திருக்கிறேன்.

இம்மாகாண சபையில் இருக்கின்ற தமிழ் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி போன்ற இதர கட்சிகளையும் இணைத்துக் கொண்டு இந்த மாகாணத்தை இந்த நாட்டில் ஒரு முன்மாதிரியான மாகாணமாக மாற்றியமைப்பேன்.

தமிழராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் அவர்களின் உழைப்பும் கல்வியும் ஆற்றலும் இந்த நாட்டின் அபிவிருத்திற்கே என்பதை எவரும் மறுக்க முடியாது.

திருகோணமலை மாவட்டதில் உயர்தரம் படித்துவிட்டு வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு கைத்தொழில் பேட்டைகளை நிறுவி வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு எனது தலைமையிலான மாகாண நபை நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியே எனது கனவாகும். இம்மாகாணத்தில் கல்வி வளா்ச்சியில் கிண்ணியா கல்வி வலயம் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. எதிர்காலத்தில் கல்வியில் இப் பிரதேசம் நாட்டுக்கே ஒரு முன் மாதிரியான பிரதேசமாகத் திகழவேண்டும் என்று தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்வி அமைச்சர் வீரவித திசநாயக்க மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஈ.போல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • mohamed haniffa Friday, 19 October 2012 02:56 PM

    தங்களின் வாக்கு செயலுருப் பெறும் பொழுது மாகாணம் மட்டுமல்லாது மாவட்டம் எமது ஊர் உங்களை என்றும் மறவாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X