2025 மே 08, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


சூரை மீனை பிடிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கிண்ணியா பிரதேச மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியாவில் மீக நீளமான பாலத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் சுமார் 500 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இம் மீனவர்கள் கடந்த வருடம் சூரை மீனைப் படிப்பதற்கு சுமார் ஏழு கிலோ மீற்றருக்கு அப்பால் சென்று பிடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும், இந்த வருடம் மீனைப் பிடிப்பதற்கு அனுமதி வழங்கவில்லையெனவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாவும் - இவ்விடயத்தில் ஜனாதிபாதி மற்றும் கிழக்கு முதலமைச்சர் தலையீட்டு தாங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுவதோடு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மற்றும் கிண்ணியா பிரதேசத்தில் சுமார் 200 பாவம் வலை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்டுவதாகவும், மற்றும் அம்பாந்தோட்டை, கிரிந்த, பொத்துவில் போன்ற பகுதிகளில் 400 பாவம் வலை 25 பாவம் இறக்கத்தல் கொண்டு செல்வதாகவும் இப்பகுதியில் 12 பாவம் 8 பாவத்தில் வலைக்க விடுவதாவும் மீன் பிடிக்க முடியாது உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தினால் இப்பகுதியில் வாகானப் போக்கவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X