2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

திருகோணமலை புல்மோட்டை கிராமத்தில் உள்ள பொன்மலைக்குடாவில் புதையல் தோண்டுவதில் ஈடு;பட்டதாக கூறப்படும் நான்கு பேரை குச்சவெளி பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து பொன்மலைக்குடா பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழுவினர், சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .